கார் நாற்பது (Kaar Narpathu)
- மதுரைக் கண்ணங்கூத்தனார்
நுழையும் முன் :
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று மதுரைக் கண்ணன்கூத்தனார் இயற்றிய "கார் நாற்பது'. பழங்கால இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் யாவரும் அறிவியல் அறிவும், தெளிவும் கொண்டிருந்தமையை அவர்தம் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. கார் நாற்பதிலும் சில அறிவியல் குறிப்புகளைக் காணமுடிகிறது. அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படு கின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது. இக்"கார் நாற்பது'.பாடல்களுக்கு, பொருள் , மற்றும் விளக்க உரைகளை தொகுத்து புத்தகம்மாக தந்துள்ளோம் இதை வாங்கி படித்து பயனடையுங்கள்..!
நன்றி..!!
புத்தக வெளியீடு :
Bright Zoom
ஆசிரியர் :
Jakkir Hussain.
கார் நாற்பது
(Kaar Narpathu)
- மதுரைக் கண்ணங்கூத்தனார்
தலைப்பு கள்:
1. கார் நாற்பது பற்றிய குறிப்புகள்...
2. காலம்பற்றிய தொகை நூல்
3. கார் நாற்பதின் உருவம்:
4. பொதுவான குறிப்புகள்
5. நூலில் அமைந்துள்ள சில மழைக்காட்சிகள்
6. கார் நாற்பது உணர்த்தும் அறிவியல் குறிப்புகள்...!
7. தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது
8. பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது
9. தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது
10. வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது.
11. தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது
12. வினைமுற்றிய தலைமகன் நெஞ்சிற்கு கூறியது
13. பருவங்கண்டழிந்த தலைமகனுக்கு தோழி உரைத்தது
14. தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
15. வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது
16. வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது
17. வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது
18. வினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு சொல்லியது
19. வினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு கூறியது
20. வினைமுற்றிய தலைவன் பாகற்குக் கூறியது
21. பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது
22. வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது
23. தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.
24. தலைவன் பொய்யுரைத்தான் என்று தோழி தலைவியிடம் கூறியது
25. பருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
26. சிறப்புப் பாயிரம்
BOOK DOWNLOAD Link
Comments
Post a Comment