Posts

Showing posts from May, 2022

மலைபடுகடாம் (Malaipadukadam)

Image
மலைபடுகடாம் (Malaipadukadam ) நுழையும் முன் : சங்ககால இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் மலைபடுகடாம் (Malaipadukadam) நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கெளசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். நவிர மலையின் தலைவனான நன்னன்னைப் பாட்டுடைத் தலை வனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். இது நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில்இருந்து பண்டையத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து விளங்கினர். அன்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர் அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர் அவ்வகையாக விருந்தோம்பல், தினைச்சோற்று விருந்து பற்றியும், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்து...